கடந்த 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா – தி ரைஸ்’. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சாய் பல்லவி நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் காடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்புக்கு கலந்து கொள்ளச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்பேருந்தில் படக்குழுவினர் பலரும் இருந்த நிலையில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.