கேரளா, திரிபுரா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் 7 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியானது. அந்த வகையில் கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதியில், உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
உம்மன் சாண்டியின் மகனான சாண்டி உம்மன் 78,098 வாக்குகள் பெற்று 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். 41,644 வாக்குகளுடன் சி.பி.எம். கட்சி 2ம் இடமும், பாஜக 6,447 வாக்குகளுடன் 3ம் இடமும் பிடித்தன.