ஜோலார்பேட்டை அருகே, மீன் வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர், அப்பகுதியில் உள்ள சுரங்கன் வட்டம் ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, அவர் வீசிய வலையில், 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு சிக்கியுள்ளது.
குமரேசன் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், அந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் விட்டனர். மீன் வலையில் மலைப் பாம்பு சிக்கிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.