இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிரதீப் ரங்கநாதன், தன்னை பைத்தியம் என்று விமர்சித்துள்ளதாக கூறியுள்ளார்.
அதாவது, “நல்லா தான பேசிட்டு இருந்த.. திடீரென பார்த்திபன் மாதிரி ஏன் பேசுற” என்ற வசனம், லவ் டுடே படத்தில் வரும். இந்த வசனம், தன்னை பைத்தியம் என்று குறிப்பதாக, பார்த்திபன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ’கோமாளி’ கதை என்னுடைய உதவியாளர் ஒருவரின் கதையை போல் இருந்தது என்று எழுத்தாளர் சங்கத்தில் பிரச்சனை வந்தது. கே பாக்யராஜ் அவர்கள் என்னுடைய உதவியாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.
மேலும் அவர் பத்து லட்ச ரூபாயும் பெற்று தந்தார். என்னுடைய உதவியாளருக்கு நான் ஆதரவாக இருந்ததால், பிரதீப் ரங்கநாதனுக்கு என் மீது கோபம் இருந்திருக்கும்.
அதனால் தான் அவர் இவ்வாறு வசனம் வைத்திருப்பதாக நினைக்கிறேன் என்று, அந்த பேட்டியில் கூறியுள்ளார். இது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.