விரைவில் எடப்பாடி சிறை செல்வார் ஆஎஸ்.பாரதி..!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு மற்றும் பல்வேறு துறைகளில் ஊழல் கொடிகட்டி பறப்பதாகவும் கூறி 10-பக்க புகார் மனுவை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் அளித்திருந்தார். இது குறித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அதிமுக ஆட்சியில் குட்கா போதை பொருட்கள் தலைவிரித்தாடியது என பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் போதை பொருள் விற்பனை செய்யும் பாஜகவினரை தட்டிக்கேட்கும் தைரியம் பழனிச்சாமிக்கு இருந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், குட்கா ஊழலில் விரைவில் குட்கா புகழ் விஜய பாஸ்கர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி சிறை செல்வார்கள் என்று கூறியுள்ளார்.