Connect with us

Raj News Tamil

ராயன் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது!

சினிமா

ராயன் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது!

பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தனுஷ். இந்த படத்திற்கு பிறகு, தான் நடிக்கும் 50-வது படமான ராயனை, தற்போது இயக்கி முடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில், காளிதாஸ் ஜெயராம், சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம், வரும் 13-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி அது இல்லை என்றும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், சமீபத்தில் தகவல் பரவி வந்தது. .

இதனால், எதுதான் உண்மையான ரிலீஸ் என்பதில், ரசிகர்கள் சற்று குழப்பத்தில் இருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

அதன்படி, ராயன் திரைப்படம், வரும் ஜூலை 26-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

More in சினிமா

To Top