“காட்டுலையே ஆபத்தான மிருகம் எது தெரியுமா” – தெறிக்கவிடும் ராயன் ட்ரைலர்!

தனுஷ் இயக்கி நடித்துள்ள 2-வது திரைப்படம் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வரும் 26-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் டிரைலர், தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது.

1.49 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த டிரைலரில், ரத்தம் தெறிக்கும் வகையிலான பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மேலும், “செல்வராகவன் :- காட்டிலேயே ஆபத்தான மிருகம் எது தெரியுமா?

சிறுவயது தனுஷ் கதாபாத்திரம்:- சிங்கம் தான..

செல்வராகவன் :- காட்டிலேயே வலிமையான மிருகம் தான் சிங்கம், புலியெல்லாம் தான்.. ஆனா ஆபத்தான மிருகம் ஓநாய்..

ஒத்தைக்கு ஒத்த நின்னா.. ஓநாயை சிங்கம் அழிச்சிடும்.. ஆனா ஓநாய் பயங்கர தந்திரவாதி.. கூட்டமா சுத்துப்போட்டு.. ஸ்கெட்ச் போட்டு சிங்கத்த அழிச்சிடும்..” என்று பேசுவது போல் வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வசனத்தோடு, பயங்க ஆக்ஷனுடன் நகரும் காட்சிகள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குறிப்பாக, டிரைலரின் முடிவில், உசுரே நீ தானே என்று தொடங்கும் பாடல், ஏ.ஆர்.ரகுமான் குரலில் ஒலிப்பது, ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை இந்த டிரைலர் கொண்டிருந்தாலும், வழக்கமான ஆக்ஷன் டிராமாவாக இப்படம் அமைந்துவிடுமோ என்ற பயமும், ரசிகர்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News