தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக தனுஷ் இருந்தாலும், அவருக்கு திரைப்படங்கள் இயக்குவதில் தனி ஆர்வம் உள்ளது. இதன்காரணமாக, பா.பாண்டி என்ற திரைப்படத்தை ஏற்கனவே இயக்கியிருந்தார்.
அதன்தொடர்ச்சியாக, தற்போது தனது 50-வது படத்தை, அவரே இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இன்று டிரைலர் ரிலீஸ் ஆக இருப்பதாக, படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர்.
ஆனால், இன்று எத்தனை மணிக்கு, அப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என்று தகவலை கூறாமல் இருந்தனர். தற்போது, அந்த தகவலை, நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, ராயன் படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாம்.