ட்விட்டரில் ட்ரெண்டாகும் RafaleWatchScam ஹேஷ் டேக் : திணறும் அண்ணாமலை

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் அணிந்திருக்கும் வாட்ச் குறித்து பேசினார். தான் அணிந்திருக்கும் வாட்ச் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களால் ஆனது என கூறினார். மேலும் தான் ஒரு தேசியவாதி என்றும் கூறினார்.

இது சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியது. 4 ஆடுகள் மட்டுமே வைத்திருக்கும் அண்ணாமலையால் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த கடிகாரத்தை எப்படி வாங்க முடியும்? என தி.மு.க கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போது இந்த வாட்ச் சர்ச்சையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சிக்கியுள்ளார். இந்நிலையில், நேற்று அண்ணாமலையின் வாட்ச் பில்லை இன்றே காட்டி பதிலளிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி ட்விட் செய்தார். விலையுயர்ந்த வாட்ச் அணிவது தேசபக்தியா என்று கேட்டுள்ளார்.

இந்த கடிகாரம் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது என்றும், தேசபக்தியின் காரணமாக கடிகாரத்தை எப்போதும் தான் அணிந்திருப்பேன் என்று அண்ணாமலை கூறினார்.

இந்த கேள்வியை அண்ணாமலை தவிர்த்துவிட்டு நகர்ந்திருக்கலாம் என பாஜக கட்சியில் உள்ளவர்கள் கருதுகின்றார். ஆனால் அண்ணாமலை விடாமல் தொடர்ந்து இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்.

தற்போது ட்விட்டரில் #RafaleWatchScam என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அண்ணாமலையின் வாட்ச் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுவதால் தமிழக பாஜக திணறி வருகிறது.