கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், படைத் தலைவன் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில், கேமியோ ரோலில் நடிப்பதற்கு, நடிகர் ராகவா லாரன்ஸ் வாக்குறுதி அளித்திருந்தார்.
மேலும், இதற்காக சம்பளம் வாங்க மாட்டேன் என்றும் அவர் உறுதி அளித்திருந்தார். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பிறகும், அதற்கான கால்ஷீட் வழங்காமல், அவர் இழுத்தடித்து உள்ளாராம்.
இதனால், படக்குழுவினர் படத்தின் பின்னணி பணிகளை கவனிக்க துவங்கிவிட்டார்களாம். வாக்குறுதி அளித்த பிறகு, கால்ஷீட் வழங்காமல் இருந்ததால், சண்முக பாண்டியன் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.