புதுக்கோட்டை மாவட்டம் குருக்குலையா பட்டியை சேர்ந்தவர் சிறுவன் விஷ்ணு. இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டுள்ளார்.
அப்போது, தங்களது கிராமத்தில் உள்ள மக்கள், குடிநீருக்காக மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.
சிறுவன் பேசும் இந்த வீடியோவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், மாற்றம் என்ற தனது அறக்கட்டளையின் மூலமாக, குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த செயலை, நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.