Connect with us

Raj News Tamil

100 கோடி ரூபாய்.. பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்..

சினிமா

100 கோடி ரூபாய்.. பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்..

காஞ்சனா சீரிஸ் திரைப்படங்கள் மூலம், ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராகவா லாரன்ஸ். இந்த திரைப்படங்களின் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து, வேறு சில திரைப்படங்களிலும், அவ்வப்போது இவர் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு, லாரன்ஸின் நடிப்பில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இவர் தற்போது பிரம்மாண்ட திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, விஷாலின் அயோக்யா என்ற திரைப்படத்தை இயக்கிய வெங்கட் மோகன் தான், லாரன்ஸின் இந்த படத்தையும் இயக்க உள்ளார். கோல்ட் மைன்ட் பிலிம்ஸ் தான், இப்படத்தை தயாரிக்க உள்ளதாம்.

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாம். இதுவரை ராகவா லாரன்ஸ் நடித்த திரைப்படங்களிலேயே, இப்படத்திற்கு தான் அதிக பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top