Connect with us

Raj News Tamil

ரஜினி ஆசைப்பட்ட கதாபாத்திரம்.. வாய்ப்பு கிடைத்தும் மிஸ் பண்ண லாரன்ஸ்!

சினிமா

ரஜினி ஆசைப்பட்ட கதாபாத்திரம்.. வாய்ப்பு கிடைத்தும் மிஸ் பண்ண லாரன்ஸ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம், வரும் தீபாவளி பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்திலேயே நான் தான் நடிக்க வேண்டியது. ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக, படத்தை மிஸ் பண்ணிவிட்டேன்.

தற்போது, இரண்டாம் பாகத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன் என்று தெரிவித்தார்.

ஜிகர்தண்டா படத்தில் இடம்பெற்ற அசால்ட் சேது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆசைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top