இன்னொரு தமிழ் ஹீரோவை வில்லனாக்கும் லோகி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று வெளியான திரைப்படம் கைதி. பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாம். இதில், நடிகர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ஏற்கனவே, விஜய்சேதுபதி, விஷால் ஆகியோரை வில்லன்களாக மாற்றியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது ராகவா லாரன்ஸையும், வில்லனாக மாற்றியுள்ளார். இந்த காம்பினேஷன், எப்படி வேலை செய்கிறது என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்..