தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூர்யா நடிகர் ரகுவரனை பற்றி பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

ஒரு நாள் படப்பிடிப்பு முடிவடைந்து சூர்யா தன் ரூமுக்கு சென்று தூங்கிவிட்டாராம். அப்போது அங்கெ வந்த ரகுவரன்,உனக்கு நிம்மதியா தூக்கம் வருதா ? அது எப்படி ஒரு விஷயத்தை சாதிக்காம உனக்கு தூக்கம் வரும். உனக்கு தனி ஒரு அடையாளத்தை உருவாக்கு. இப்பொது நீ சிவகுமாரின் மகன் சூர்யா தான். எனவே எதிர்காலத்தில் சூர்யாவின் அப்பா தான் சிவகுமார் என சொல்லும் அளவிற்கு தனி ஒரு அடையாளத்தை உருவாக்கு என ரகுவரன் கூறியுள்ளார்.
அந்த ஒரு நொடி தான் சூர்யா தன்னை பற்றியும் ரகுவரன் சொன்னதை பற்றியும் யோசித்துள்ளார். அதில் இருந்து சூர்யாவின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டதாம். இதையடுத்து காக்க காக்க, பிதாமகன், கஜினி, அயன், ஆதவன் என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து இன்று இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.