Connect with us

Raj News Tamil

நிலக்கரி கொண்டு செல்லும் மிதிவண்டியை இயக்கும் ராகுல்! – வைரலாகும் புகைப்படம்!

இந்தியா

நிலக்கரி கொண்டு செல்லும் மிதிவண்டியை இயக்கும் ராகுல்! – வைரலாகும் புகைப்படம்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நீதிப் பயணம், மணிப்பூரில் தொடங்கி அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிகாரை கடந்து ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

ஜார்கண்ட் மாநில எல்லையில் இருந்து ராஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்த போது, நிலக்கரி சுமை ஏற்றிய மிதிவண்டிகளுடன் சென்ற இளைஞர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

மேலும் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, “நாள்தோறும் 200 கிலோ எடையுள்ள நிலக்கரியை மிதிவண்டிகளில் சுமந்து கொண்டு 400 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் இந்த இளைஞர்களின் வருமானம் பெயரளவுக்குதான் உள்ளது.

அவர்களுடன் நடக்காமல், அவர்களின் சுமையை உணராமல் அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாது. இளம் தொழிலாளர்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்தால், நாட்டின் கட்டமைப்புச் சக்கரம் நின்றுவிடும்.” எனத் தெரிவித்துள்ளார்.

More in இந்தியா

To Top