38வது நாள் நடைப்பயணம் – கார்நாடகாவில் தொடங்கும் ராகுல் காந்தி!

இந்திய ஒற்றுமை பயணத்தின் 38வது நாள் நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மீண்டும் கார்நாடகாவில் தொடங்கியுள்ளார். இந்த பயணம் ஆந்திரா பிரதேச வழியாகவும் செல்கிறது.

தமிழ்நாடு, கேரள பயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது கர்நாடாகாவில், இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி, தனது 37வது பயணத்தை, சித்ரதுர்காவின் பொம்மகொண்டனஹள்ளில் தொடங்கி ராம்பூராவில் நிறைவு செய்தார்.

இந்நிலையில் கார்நாடகாவின் சித்ரதுர்காவின் ராம்பூராவில் இருந்து இன்று தனது 38வது நாள் நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனார். ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு வழிநெடுக்கிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனார். இந்த பயணம் இன்று ஆந்திர பிரதேசத்தின் ஆனந்தபுரம், உள்ளிட்ட வழியாக சென்று பெல்லார்யில் நிறைவு பெறுகிறது.