தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இணைந்து பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி ஆட்டோவில் பயணித்தபடி வாக்கு சேகரித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமீபகாலமாக விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், லாரி ஓட்டுநர்கள் எனப் பல்வேறு தரப்பினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி உரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.