நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 52 இடங்கள் மட்டுமே கைப்பற்றி இருந்தது.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி, கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ராகுலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 15 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.