முலாயம் சிங் யாத்வ்விற்கு அஞ்சலி செலுத்திய – ராகுல் காந்தி!

தேசத்தின் எதிர்காலம் கண் முன்னால் சிதைவதைக் கண்டு, ஒதுங்கி போக முடியாது என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் 34-வது நாளில், கர்நாடக மாநிலம் ஹர்திகோட்டே என்ற இடத்தில் அவர் நடைப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, மறைந்த முலாயம் சிங் யாதவ்விற்கு ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடைப்பயணத்தை தொடர்ந்த அவர், சித்தாபுராவில் நிறைவு செய்தார்.

இதையடுத்து, அங்குள்ள வெவ்வேறு சமுதாய மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நாட்டின் எதிர்காலம் மீதான நம்பிக்கை அழிந்து வருவதாக வேதனை தெரிவித்தார்.

வெறுப்பு, வன்முறை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக அவர் சாடினார்.
ஆனால், கண் முன்னால் தேசத்தின் எதிர்காலம் சிதைவதை கண்டு காங்கிரஸ் ஒருபோதும் ஒதுங்கியிருக்காது என்று அப்போது அவர் கூறினார்.