உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
வரும் மே 20-ஆம் தேதி அன்று, 5-ஆம் கட்ட வாக்குப் பதிவு, அந்த தொகுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ரேபரேலி பகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது, பொதுமக்களில் ஒருவர், ராகுல் காந்தியின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், விரைவில் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக, தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்திக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.