மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 துவங்கி ஜூன் 1 வரை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் வெளியாகிறது.
இந்த தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக வைத்து என்டிஏ கூட்டணியும், மோடியை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென இந்தியா கூட்டணியும் களத்தில் இறங்கியுள்ளது..
இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் பேசிய ராகுல் காந்தி “பொதுவாகவே, தொகுதிகள் குறித்த கணிப்புகளை நான் மேற்கொள்ளவதில்லை.. கடந்த 15-20 தினங்களுக்கு முன்பு, பாஜக 180 தொகுதிகளில் வெற்றிப் பெரும் என நினைத்தேன். ஆனால், இப்போது, அவர்கள் 150 தொகுதிகள்கூட வெல்லமாட்டார்கள்.. அனைத்து மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி மக்கள் மத்தியில் கவனம் பெறுவதாக தெரிகிறது. அதேப்போல, உத்திர பிரதேச மாநிலத்திலும் உறுதியான கூட்டணியோடு கைக்கோர்த்து இருப்பதால் சிறப்பான செயல்பாடு இருக்கும்” என்றார்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, தேர்தல் முடிவுகள் வெளியானதும் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிப்போம் என பதிலளித்தார்.