நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடந்து வந்த மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.
இந்த கருத்துக்கணிப்பில் பாஜக 350 தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என வெளியிடப்பட்டது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது; இது கருத்துக்கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கணிப்பு. அவரது கற்பனை கருத்துக்கணிப்பு. ‛ இந்தியா ‘ கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.