ரயில் பயணிகளுக்கான உணவு தயாரிப்பு மற்றும் விநியோகப் பணியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐஆர்சிடிசி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரயில்களில் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. எந்த வித முன் அறிவிப்பு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டதால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புதிய விலை பட்டியல்
- இரண்டு இட்லி ரூ.20.
- இரண்டு சப்பாத்தி ரூ.20.
- ஒரு வடை ரூ.15.
- பிரெட் சான்வெட்ஜ் ரூ.20.
- இரண்டு சமோசா ரூ.20.
- ரவா,கோதுமை, சேமியா உப்புமா தலா ரூ.30.
- மசாலா தோசை ரூ.50.
- புளி, எலுமிச்சை, தயிர், தேங்காய் சாதம் தலா ரூ.50.
- வெஜ் நூடுல்ஸ் ரூ.50
- வெஜ் பிரைடு ரைஸ் ரூ.80.
- பன்னீர் சில்லி, மஞ்சூரியன் தலா ரூ.100.
- இரண்டு அவித்த முட்டை ரூ. 30.
- சிக்கன் சான்வெட்ஜ் ரூ.50.
- முட்டை பிரைடு ரைஸ், நுாடுல்ஸ் தலா ரூ.90.
- சிக்கன் 65 ரூ.100.
- பொறித்த மீன், குழம்பு ரூ.100.
இந்த விலை உயர்வு கடந்த 26-ம்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.