ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக் கொலை செய்த ரயில்வே காவலர்!

ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) காவலர் ஒரு 4 பயணிகளை ஓடும் ரயிலில் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை காவலர் நிகழ்த்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் ஒருவர் ஆர்பிஎஃப் சப்-இன்ஸ்பெக்டர் ஆவர். மற்ற மூவரும் ரயிலில் பயணித்த பயணிகள். துப்பாக்கிச் சூடு நடத்திய கான்ஸ்ட்பிள் சேத்தன் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்கட்ட தகவலின்படி, ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் சேத்தன் சிங்க்கும், அவருடன் பயணித்த சப்-இன்ஸ்பெக்டரும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்களை சமாதானம் செய்ய சக பயணிகள் முயன்ற சமயத்தில் கான்ஸ்டபிள் சேத்தன் சிங் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டத்தில் சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நான்கு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தாஹிசார் ஸ்டேஷன் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளார் கான்ஸ்டபிள் சேத்தன் சிங். எனினும் அவரை விரைவாகவே ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News