ரயிலில் பயணிக்கும் சில பயணிகள், சில நேரங்களில், ரயில் சக்கரங்களுக்கு இடையே சிக்குவதையும், அந்த சமயத்தில் ரயில்வே காவலர்கள் அவர்களை காக்கும் சம்பவங்களும், நிறைய நடந்துள்ளன.
அத்தகைய சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது. அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் போரிவாலி ரயில் நிலையத்திற்கு, ரயில் ஒன்று வந்துள்ளது. அப்போது, அந்த ரயில் நிற்பதற்கு முன்பே, அதில் இருந்த பெண் பயணி ஒருவர் இறங்க முற்பட்டுள்ளார்.
ஆனால், அப்போது கால் தவறி தண்டவாளத்திற்கு நடுவே விழ இருந்தார். ஆனால், அதற்குள் அங்கு வந்த ரயில்வே காவலர், அந்த பெண்ணை நடைப்பாதைக்கு இழுத்து, காப்பாற்றினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, அந்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.