Connect with us

Raj News Tamil

தமிழகத்தில் மீண்டும் மழை! – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் மழை! – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் டிசம்பர் 16, 17ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் வரும் டிசம்பர் 19ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் டிசம்பர் 16,17ல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top