மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வரும் 12-ம் தேதிவரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.