திருவாரூர் அருகே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய பயிர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, நெம்மேலி, கம்மங்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து, விவசாய பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளன.
இதுகுறித்து பேசியுள்ள அப்பகுதி விவசாயிகள், வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாததால் தான், மழை நீரை வடிய வைக்க முடியவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
மேலும், பாதிக்கப்பட்ட நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளனர்.