ராஜ் தொலைக்காட்சியின் புதிய OTT அறிமுகம்!

டிஜிட்டல் யுகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒடிடி தளங்களும் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த துறையில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது ராஜ் டிவி நிறுவனமும் இணைந்துள்ளது.

அதாவது, ராஜ் டிஜிட்டல் டிவி என்ற பெயரில் ஒடிடி நிறுவனம் ஒன்றை, ராஜ் குழுமம் தொடங்கியுள்ளது. இந்த App-ன் அறிமுக விழா, சென்னை தரமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக, இளைஞர்களின் இசை போதைப் பொருளான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்துக் கொண்ட இந்நிகழ்வில், ராஜ் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், டாக்டர்.ரவீந்திரன் ராஜரத்தினம், ஐசரி கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.