திருத்தணி முருகன் கோயிலில் 11 வருடமாக ராஜ கோபுர பணி முடிவடையவில்லை என்பதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலில் 2011 ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க ஆட்சியில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் ஆமை வேகத்தில் நடந்துவந்தன.
தற்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருத்தணி முருகன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பிறகு இந்த ராஜகோபரப்பணி நிறைவு செய்வதற்காக 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.
ஆனாலும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை.
இந்த பணி 11 வருடமாக முழுமை பெறாமல் அப்படியே இருப்பதால் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் ராஜகோபுரம் எப்போது நிறைவுறும், ராஜகோபுரம் நிறைவு பெற்ற பிறகு எப்போது கும்பாபிஷேகம் திருக்கோயிலில் நடைபெறும், என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.