ராதாரவியுடன் இணைந்த ராஜலட்சுமி!

சின்ன மச்சான், ஏய் சாமி உள்ளிட்ட பாடல்கள் மூலம் பெரும் பிரபலம் அடைந்தவர் ராஜலட்சுமி. கிராமிய பாடகியான இவர், தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

அதாவது, கணபதி பாலமுருகன் இயக்க இருக்கும் படத்தில், ராஜலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். மேலும், இந்த படத்தில், பிரபல நடிகர் ராதாரவியும், ராஜலட்சுமியுடன் இணைந்து நடிக்க உள்ளார். பெண்களின் மேன்மையை வெளிக்காட்டும் விதமாக தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.