ராஜமௌலியை கடுமையாக விமர்சிக்கும் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்!

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான இசையில், பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம், அனைத்து இடங்களிலும், நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும், இயக்குநர் மணிரத்னத்தை அவரது ரசிகர்கள், ஆஹா ஓகோ-வென புகழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு மணிரத்னத்தை ரசிகர்கள் ஒரு பக்கம் புகழ்ந்து வந்தாலும், இயக்குநர் ராஜமௌலியை விமர்சித்தும் வருகின்றனர். அதாவது, பொன்னியின் செல்வன் பார்த்த பிறகு, “பாகுபலி எல்லாம் ஒரு படமே கிடையாது. கமர்ஷியலாக பல்வேறு விஷயங்களை நுழைத்துள்ளார்கள். தேவையில்லாத பாடல். ஐட்டம் சாங் போன்ற பல்வேறு தேவையில்லாத ஆணிகளை ராஜமௌலி திணித்துள்ளார்” என்று விமர்சித்து வருகின்றனர்.

இவ்வளவு நாள் ராஜமௌலியை புகழ்ந்து வந்த ரசிகர்கள், பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு விமர்சித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் தான் சிறந்த வரலாற்று திரைப்படம் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.