Connect with us

Raj News Tamil

வெளியேறியது ராஜஸ்தான்: இறுதி போட்டிக்கு நுழைந்தது ஹைதராபாத்!

விளையாட்டு

வெளியேறியது ராஜஸ்தான்: இறுதி போட்டிக்கு நுழைந்தது ஹைதராபாத்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

நடப்பு ஐபிஎல் போட்டியில் 2-வது குவாலிஃபயர் ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச முடிவு செய்த நிலையில், ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்தது.

ஹைதராபாத் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறக்கினர். அபிஷேக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த திரிபாதி 37 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் (1) வந்த வேகத்தில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தொடக்க வீரர் ஹெட் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில் ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கிளாசன் அதிகபட்சமாக 50 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் – டாம் கோலர் காட் மோர் களமிறங்கினர். டாம் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால், ஐதராபாத் அணியின் சிறப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

கடைசி வரை போராடிய துருவ் ஜூரெல் 35 பந்துகளில் 56 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்சை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதிப்போட்டிக்குள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நுழைந்தது.

More in விளையாட்டு

To Top