Connect with us

Raj News Tamil

மிகப்பெரிய பசுமாடு கொட்டகையில் தீ விபத்து!

இந்தியா

மிகப்பெரிய பசுமாடு கொட்டகையில் தீ விபத்து!

அதிகப்படியான வெப்பம் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில், தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இன்று மட்டும், தொடர் தீ விபத்துகள் பதிவாகியுள்ளது.

இதில், அதிகாலையில், மும்பையில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கிடையே, மத்திய பிரதேசத்தின் மருத்துவமனை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸிலும், திடீரென தீ பற்றிக் கொண்டது.

இதேபோல், ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் பகுதியில் உள்ள டிங்கு காட்டுப் பகுதியில், காட்டுத் தீ ஏற்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள கஜ்சிங்பூர் பகுதியில் உள்ள மாட்டு கொட்டகையில், நேற்று இரவு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும், தீயை அணைக்க தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாட்டு கொட்டகையில், கிட்டதட்ட 600-க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்துள்ளன. அதில் இருந்த அனைத்து மாடுகளும், பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்று, இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

சம்பவம் குறித்து, அப்பகுதி தாசில்தார் பன்வாரி லால் சௌத்ரி, “தீ விபத்து ஏற்பட்டது நேற்று இரவு தான். சம்பவ நடந்த மிக விரைவிலேயே, காவல்துறையினரின் அணி, தீயணைப்பு படை வீரர்களுடன் சேர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்றது.

அனைத்து பசுமாடுகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது மற்றும் பாசுகாப்பான இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

“இன்று மாலைக்குள், நெருப்பி அணைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாமல் இருப்பதால், விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

More in இந்தியா

To Top