இந்தியாவில் பெண்களுக்கு இருந்து வரும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது வரதட்சனை. இந்த பிரச்சனையில் சிக்கி, சில பெண்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.
எனவே, இதற்கு ஒரு தீர்வு கட்ட வேண்டும் என்று, 1961-ஆம் ஆண்டு வரதட்சனை தடை சட்டம், ஐ.பி.சி. 1860 என்று பல்வேறு சட்டங்களை, அரசு விதித்திருக்கிறது. சில சமூக செயற்பாட்டாளர்களும், இந்த நிலையை போக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
ஆனால், தனி மனிதன் மாறினால் தான், அனைத்தும் மாறும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இந்நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனமகன் ஒருவர், அதிரடி முடிவு எடுத்து,பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதாவது, ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில் உள்ள டன்டா ராம்கர் பகுதியை சேர்ந்தவர் ஜெய் நாராயண் ஜாகர்.
பொதுப் பணித்துறையில் ஜூனியர் பொறியாளராக பணியாற்றி வரும் இவருக்கும், அனிதா என்ற பெண்ணுக்கும், திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இந்த திருமண பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டபோது, நாராயண் ஜாகர் கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.
அது என்னவென்றால், “உங்களிடம் இருந்து எனக்கு வரதட்சனையே வேண்டாம்” என்றும், “திருமணத்திற்கு பிறகு, வேலை கிடைத்த பிறகு, அனிதா சம்பாதிக்கும் பணத்தை, அவரது பெற்றோருக்கு கொடுக்கலாம்” என்றும் கூறியுள்ளார்.
இவரது பேச்சை கேட்ட அனிதா பெற்றோர், மெய் சிலிர்த்து போயுள்ளனர். இவரது இந்த முடிவு, அம்மாநில மக்களிடையே, பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.