மரணத்தின் விளிம்பில் ரஜினி பட தயாரிப்பாளர்..! ஓடி வந்து உதவிய சூர்யா..!

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் வி,ஏ. துரை. எவர்கிரீன் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் சேது, லூட்டி, பிதாமகன், பாபா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். ஆனால் பல வெற்றிப்படங்களை கொடுத்த போதிலும், ஒரு சில படங்களின் தோல்வியால் கடும் நஷ்டத்தை தழுவினார். இந்த நிலையில் சக்கரை வியாதியால் அவதிப்பட்டு வரும் இவர், கால்களில் ஏற்பட்ட காயம் காரணமாக, சதைகள் சிதைந்து பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்.

தற்போது நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருக்கும் வி.ஏ.துரை, மருந்து செலவுக்கு பணம் வேண்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த நடிகர் சூர்யா முதல் ஆளாக ஓடி வந்து, அவரின் சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கு அவரது ரசிகரகள் , பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News