சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடலால் தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சையே கிளம்பியுள்ளது. அந்த பாடலில் இடம் பெற்ற ‘இவன் பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு’ என்ற வரிகள் விஜய்யை தாக்குவதாக உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜூலை 28ஆம் தேதி நடைபெறும் ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த இந்த பிரச்சனையை பற்றி பேசுவார் என்று சொல்லப்படுகிறது. அதாவது, 1978 ஆம் ஆண்டு முதல் தன்னுடன் பயணித்து வந்த சூப்பர்ஸ்டார் பட்டத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுகுடுப்பாரா? அல்லது பட்டத்தை பறிக்க நினைப்பவர்களை கண்டிப்பாரா ? என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து சினிமா ரசிகர்களும், விமர்சகர்களும் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச்சிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.