வாழும் வள்ளுவரே..காவி உடையில் ரஜினி…யார் பார்த்த வேலை தெரியுமா இது?

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஒருபக்கம் ரஜினியின் பிறந்த நாள் இன்னொருபுறம் ஜெயிலர் படத்தின் அப்டேட் என ரஜினி ரசிகர்கள் தற்போது கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர் கமல் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

cinema news in tamil

இந்நிலையில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர் ஒன்று தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘வாழும் வள்ளுவரே’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் உடன் ரஜினியை திருவள்ளுவர் போன்று சித்தரித்தவாறு போஸ்டர் ஒட்டப்பட்டது.

இந்த போஸ்டர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதி நகர தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக ஒட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வள்ளுவருக்கு காவி உடை போன்ற சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், தற்போது ரஜினியை வள்ளுவராக்கி அவருக்கு காவி உடையை கொடுத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.