படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்ட ரஜினி – கமல்!

நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல்ராஜா இயக்கும் தனது 170-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது.

இதேபோல், நடிகர் கமலின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும், பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த இருவரும், இன்று சந்தித்துக் கொண்டனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்த இரண்டு திரைப்படங்களையும், லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News