சென்னை தேனாம்பேட்டையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட நிர்வாகிகள், பல்வேறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக நாடகம் ஒன்று நடத்தப்பட உள்ளது என்றும், அந்த நாடகத்தில், நடிகர் ரஜினியும், கமலும், இணைந்து நடிக்க உள்ளனர் என்றும் கூறினார்.
இவரது இந்த அறிவிப்பு, ரஜினி – கமல் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.