Connect with us

Raj News Tamil

“காஞ்சனா 2-வில் ரஜினி” – சுவாரசிய தகவல் சொன்ன லாரன்ஸ்!

சினிமா

“காஞ்சனா 2-வில் ரஜினி” – சுவாரசிய தகவல் சொன்ன லாரன்ஸ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், உருவாகி உள்ள திரைப்படம் ஜிகர்தண்டா 2. இந்த திரைப்படம், வரும் 10-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில், கலந்துக் கொண்ட ராகவா லாரன்ஸ், பல்வேறு கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

அப்போது, ரஜினி தொடர்பான சுவாரசிய தகவல் ஒன்றையும் கூறினார். அதாவது, காஞ்சனா 2 திரைப்படத்தில், ரஜினியை தான் நடிக்க வைக்கலாம் என்று ராகவா லாரன்ஸ் முடிவு செய்திருந்தாராம்.

ஆனால், தாயின் இடுப்பில் உட்காருவது போன்ற காட்சியில், ரஜினி நடித்தால், சரியாக இருக்காது என்பதால், அந்த முடிவை கைவிட்டுவிட்டேன் என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top