பிறந்த நாள் அன்று ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி!

ரஜினியின் பிறந்த நாள், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திரைப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் ரசிகர்கள், அவரது போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்று, ரஜினிக்கு வாழ்த்து சொல்ல முயன்றுள்ளனர். ரசிகர்களின் நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு வெளியே வந்த லதா ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ரஜினி ஊரில் இல்லை என்றும், அவர் சார்பாக என் நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், தெரிவித்துள்ளார். இதனால் ரஜினியை காண வந்த ரசிகர்கள், பெரும் ஏமாற்றம் அடைந்தனர்