தனுஷின் நீண்ட நாள் ஆசை! நிறைவேற்றிய ரஜினி!

நடிகர் தனுஷூம், அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிய முடிவு செய்திருப்பதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். ஆனால், இருவீட்டாரும் தொடர்ந்து பேசியதைத் தொடர்ந்து, இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ரஜினி வீட்டின் அருகிலேயே, பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி வரும் தனுஷ், வரும் ஜனவரி மாதம், தனது மனைவியுடன் குடியேற போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில், ரஜினி தனுஷிற்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ரஜினியின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் ஆசையாம். ஆனால், எந்தவொரு படத்திலும், தனுஷால் நடிக்க முடியவில்லையாம். இதன்காரணமாக, ஜெயிலர் படத்திற்கு பிறகு, ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தில், தனுஷ் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாம். இதன்மூலம், தனுஷின் நீண்ட நாள் ஆசையை ரஜினி நிறைவேற்றியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.