லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, ஜெயிலர் படத்தின் 2-ஆம் பாகத்தில் நடிக்க உள்ளார்.
இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, மீண்டும் தொடர்ச்சியாக நடிப்பதற்கு, ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளாராம். இதனால், பல்வேறு இயக்குநர்களிடம் கதைகளை கேட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மாரி செல்வராஜிடம், ரஜினிகாந்த் கதையை கேட்டுள்ளார்.
இதையடுத்து, இருவரும் திரைப்படங்களில் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, மாரி செல்வராஜின் கதையை, ரஜினிகாந்த் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.