மகள் முன்பு தனுஷ் பற்றி பேசி அதிரடி காட்டிய ரஜினி!

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து லால் சலாம் என்ற படத்தை ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது ரசிகர்கள் மத்தியில், ரஜினிகாந்த் உரையாற்றினார். அதில், “நான் பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்து பழகவிட்டதால், மகளின் படத்தில் நடிப்பதற்கு தயங்கினேன்.

கோச்சடையான் படத்தில் நடித்தபோதும் இந்த தயக்கம் இருந்தது. தனுஷ்-ம் எனக்கு இரண்டு கதைகள் கூறியிருந்தார்.

நான் அவரிடம் என்னுடைய தயக்கம் பற்றி கூறினேன். அவரும் புரிந்துக் கொண்டார். ஆனால், லால் சலாம் படத்தில், நான் கேட்டு நடித்தேன்” என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News