நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்து விட்டதாக படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப்கமார் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் படம் தொடர்பாக எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் ஜெயிலர் படம் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என இயக்குநர் நெல்சன் உறுதி அளித்துள்ளார்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்திற்கான வேலையைத் தொடங்கத் தயாராகி வருகிறார். அதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதற்காக ரஜினிகாந்த் 7 நாட்கள் கால் ஷீட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.