Connect with us

Raj News Tamil

ஒரே படத்திற்காக இணையும் ரஜினி, கமல், விஜய்!

சினிமா

ஒரே படத்திற்காக இணையும் ரஜினி, கமல், விஜய்!

இயக்குநர்களின் மகன்கள் சினிமாவில் அறிமுகமாவது அவ்வப்போது நடந்து வருகின்றன. நம்முடைய தளபதி விஜய் கூட, அவ்வாறு சினிமாவில் அறிமுகமான ஒருவர் தான்.

அந்த வகையில், இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, ஹிட் லிஸ்ட் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தான், தயாரித்து வெளியிட உள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர்கள் விஜய், ரஜினி, கமல், சூர்யா ஆகிய 4 நடிகர்கள் இணைந்துள்ளனர்.

அதாவது, இப்படத்தின் படக்குழுவினர், இந்த நடிகர்கள் 4 பேரையும், மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, படம் தொடர்பான கிளிம்ஸ் வீடியோக்களை காண்பித்துள்ளனர். அவர்கள் அந்த வீடியோக்களை பார்த்து ரசிப்பதை, படம் பிடித்து, புரமோஷனுக்கு பயன்படுத்தியுள்ளனர்.

More in சினிமா

To Top