கூலி படத்திற்காக புது வித்தையை கற்றுக்கொள்ளும் ரஜினி

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படம் தந்த வெற்றியில் உற்சாகமாக இருக்கின்றார். ஞானவேல் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்துள்ளது. 

வேட்டையன் வெற்றி கொடுத்த உத்வேகத்தில் ரஜினி தன் அடுத்த படமான கூலி படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் கூலி படத்திற்காக ரஜினி மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. கூலி படத்தில் சண்டை காட்சிகளை சற்று வித்யாசமாக படமெடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். 

உடனே ரஜினிக்கு இந்த ஐடியா பிடித்துப்போக ரஜினியே தானாக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு அந்த நுணுக்கங்களோடு சண்டை காட்சிகளில் நடித்து வருகிறாராம். இதனை பார்த்த லோகேஷ் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு அசந்து போய்விட்டார்களாம். 

கண்டிப்பாக ரஜினியின் இந்த கடினமான உழைப்பிற்கு சிறப்பான பலன் கிடைக்கும் என உறுதியாக சொல்லப்படுகின்றது.

RELATED ARTICLES

Recent News