Connect with us

Raj News Tamil

விஜய்-க்கு போட்டியாக ரஜினி செய்த செயல்.. 171 படத்தின் சம்பளம் என்ன தெரியுமா?

சினிமா

விஜய்-க்கு போட்டியாக ரஜினி செய்த செயல்.. 171 படத்தின் சம்பளம் என்ன தெரியுமா?

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். பெரும் வெற்றிப் பெற்ற இந்த திரைப்படம், 600 கோடி ரூபாய்-க்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். அப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் ஷீட்டிங் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தலைவர் 171 படத்தில், ரஜினியின் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அந்த படத்திற்காக, நடிகர் ரஜினிகாந்த், 220 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க உள்ளாராம்.

தளபதி விஜயை முந்த வேண்டும் என்பதற்காகவே, அவர் இவ்வாறு சம்பளம் வாங்கியுள்ளதாகவும், திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவல், இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

More in சினிமா

To Top